| Country | |
| Publisher | |
| ISBN | 9788198809568 |
| Format | PaperBack |
| Language | Tamil |
| Year of Publication | 2025 |
| Bib. Info | 132 p.; ills. 23 cm. |
| Categories | Self Help |
| Product Weight | 250 gms. |
| Shipping Charges(USD) |
புதுமைகள் படைக்க உதவும் பேராயுதம் சமூகத்தில் பல தரப்பு மக்களுடனும் தொடர்ச்சியாக ஆழ்ந்த உரையாடலை நிகழ்த்தக் கூடிய திறன் பெற்றிருப்பவர்கள், வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறுகிறார்கள். இத்தகைய திறன் பெற்றோர் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியும். இத்தகைய உரையாடல் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டுமானால், அவரிடம் கேள்வி கேட்கும் திறன் அவசியம் இருக்க வேண்டும். அதுவும் தேர்ந்தெடுத்த, நல்ல கேள்விகளைக் கேட்கும் திறன் இருப்பது கூடுதல் பலனைத் தரும். கேள்விக்குப் பதில் கூறப் பலரால் முடியும். ஆனால், பதில்களிலிருந்து புதிய கேள்விகளை எழுப்பச் சிலரால் மட்டுமே முடியும். ஆக, மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்களை மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், அந்தப் பதில்களிலிருந்து புதிது புதிதாகக் கேள்விகளை எழுப்பும் திறனை சிறு வயதிலிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும்.