| Country | |
| Publisher | |
| ISBN | 9789348439475 |
| Format | PaperBack |
| Language | Tamil |
| Year of Publication | 2025 |
| Bib. Info | 260 p.; 23 cm. |
| Categories | Reference |
| Product Weight | 350 gms. |
| Shipping Charges(USD) |
வரலாறு அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதர்களுடைய பெருமைகளையும் சிறுமைகளையும் ஓரவஞ்சனையில்லாமல் பதிவு செய்துகொண்டிருக்கிறது. இன்றைய ஆர்ப்பாட்டங்களும் கூச்சல்களும் பொருட்டில்லை. நாளைக்கு அவை எப்படி -நினைவில் தங்கப்போகின்றன, என்ன தாக்கத்தை உண்டாக்கப்போகின்றன என்பதைப் பொறுத்துத்தான் உயர்வும் தாழ்வும். மனித மனங்களின் வலிமையை உணர்த்தும் வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒவ்வொரு நிகழ்வும் நாம் எட்டக்கூடிய உயரங்களை நமக்கு நினைவூட்டுகிறது, அந்தப் பயணத்தில் சறுக்கல்களும் வரலாம் என்று நினைவூட்டி வழிகாட்டுகிறது. வரலாற்றில் பாடம் கற்றுக்கொள்கிறவன் மட்டும்தான் வளர்கிறான் என்பதும் வரலாறு! தினமலர் பட்டம் மாணவர் இதழில் தொடராக வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் இவை; என். சொக்கனுடைய எளிமையான, இனிமையான மொழியில் வரலாற்றின்மீது பெரிய ஆர்வத்தைத் தூண்டக்கூடியவை.